ஓய்வூதிய நண்பர்களே வணக்கம்.
மாற்றம் என்ற சொல்லே மாறாதது. இப்பூவுலக்கில் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவையாகும். நான் ஏதோ தத்துவம் பேசுவதாக எண்ணவேண்டம், இன்று இந்தியாவில் ஒய்வூதியம் படும்பாடு தான் இந்த வார்த்தையை நினைவுபடுத்துகிறது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஓய்வூதியம் பற்றி முழுமையான சட்ட பாதுகாப்பு உள்ளதா என்று பார்த்தால் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை. ஆனால்
Article 14 (Right to equality) and article 21 (Right to life and liberty) support the payment of pension. Whereas article 366 (17) defines pension as charitable allowance or compassionate allowance. Article 309 empowers Parliament and State Legislatures to regulate the recruitment and condition of service, including pension, for Government employees. The Pension Payment Order (PPO) is a statuary document that guarantees the payment of Pension. The Government of India’s department of Pension and Pensioner’s welfare has issued instructions and guidelines to ensure the timely payment of Pension to retired government employees. While the Constitution does not directly guarantee the payment of pension and even after the judgment delivered on 17.12.1982, against the case filed by D.S.Nehra, by the Supreme Court, the union Government never bothered and initiated no action for making pension as a statutory right by amending the constitution, this is the plight of poor pensioners in India.
இன்றைய தேதியில் இந்தியாவில் பலவகை ஓய்வூதியங்கள் நடைமுறையில் உள்ளது. பழைய ஓய்வூதியம் (OldPensionSystem), பங்களிப்பு ஓய்வூதியம் (ContributoryPensionSystem) தேசிய ஓய்வுதியம் (NationalPensionSystem) இத்துடன் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியம் (UnifiedPensionSystem). பரவலாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் 1.1.2004 குப் பின்னால் பழைய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியம் என்ற முறையே செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 2004 குப் பதிலாக ஜனவரி 2009 முதல் பங்களிப்பு ஓய்வூதியம் நடைமுறையிலுள்ளது விதிவிலக்காக கேரள மாநிலத்தில் மட்டும் இன்றளவும் பழைய ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. கூடவே 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வூ பெற்றவர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. (Additionally, Kerala has also introduced the Kerala State Employees' Pension Fund Scheme, 2021, which provides an additional pension benefit to employees who have completed 30 years of service.)
ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களுக்கு 1.1.2004 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்திவிட்டு புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்கி வருகிறது. திரு A.B. வாஜ்பாயீ தலைமையில் ஆட்சியில் இருந்த NDA அரசு 1.1.2004 முதல் பணியில் சேருகின்ற அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) மூலம் ஓய்வூதியம் வழங்க நிர்வாக நடைமுறையின் மூலம் ஆணையிட்டது. மேற்கண்ட ஆணையினை The Pension Fund Regulatory & Development Authority Act 2013 notified in February 2014 enabled statutory basis for the NPS. இத்திட்டத்தின்படி அரசுப் பணியாளர் தனது அடிப்படை ஊதியத்திலிருந்து 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் இணையாக அரசு தரப்பிலிருந்து 14 விழுக்காடு வழங்கப்படும். பணி ஓய்வூ பெறும்போது 60 விழுக்காடு சேமிப்பு வட்டியுடன் திரும்ப வழங்கியது போக மீதமுள்ள 40 விழுக்காடு Annuity deposit ல் வரவு வைத்து கிடைக்கும் வட்டியில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற முறை இருக்கிறது..
ஆனால் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த முனையாமல் ஒன்றிய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension System) என்ற பெயரில் சில மாறுதல்களுடன் 1.4.2025 முதல் செயல்பாட்டிற்கு வரும் வகையில் அமைச்சரவை ஒப்புதலுடன் மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வரைவின் உள்ளடக்கம் ஏறக்குறைய சில மாற்றங்களுடன் தேசிய ஓய்வூதிய திட்டம் போல காட்சியளிக்கிறது. இதிலும் பணியாளர் தனது அடிப்படை ஊதியத்தில் 10 விழுக்காடு இத்திட்டத்திற்கு வழங்க வேண்டும். அரசு தன் பங்காக 14+4.5=18.5 விழுக்காடு வழங்கும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூ பெறும்போது மொத்த சேமிப்பில் 60 விழுக்காடு திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தில் எதுவும் மொத்தமாக திரும்ப வழங்கப்பட மாட்டாது. மொத்த தொகை அனைத்தும் அரசுக்கே சொந்தமாகும். அதற்குப்பதிலாக 25 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர் ஓய்வூ பெறும் நாளன்று உள்ள அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியமாக வழங்கப்படும். அத்துடன் அவருக்கான பணிக்கொடை வழங்கப்படும். மேலும் 10% ஊதியம்+ஆகவிலைப்படி வீதம் முடிவுற்ற 6 மாதத்திற்கு ஒருமுறை என்று கணக்கிட்டு சிறப்புத் தொகை ஒன்றும் வழங்கப்படும். ஒரு பணியாளர் 25 ஆண்டுகள் பணி முடித்தவர் எனக்கொண்டால் 5 முழு மாதத்திற்கான தொகை பணிக்கொடையுடன் சேர்த்து வழங்கப்படும். இத் தொகை ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதற்குப்பதிலாக 40% கம்முடேஸன் நிறுத்தப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும் ஓய்வுதியம் பெறுவதற்கு தகுதியுடையவராவார். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ10,000/- ஆகும். குடும்ப ஓய்வூதியமாக 60 விழுக்காடு ஓய்வூதியத்திலிருந்து மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் (50% Pension Rs10,000/- என்றால் 60% Family Pension Rs6000/- மட்டுமே) Here I learned that 60% of family pension will be paid to spouse, that the service pensioner may be under superannuation class only.
கடந்த காலத்தில் நமது நாட்டில் நடைமுறை படுத்தப்பட்ட ஓய்வூதியம், தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியம், எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரவுள்ள ஓய்வூதியம் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளது
Details | OPS (Old Pension) | NPS (National Pension) | UPS (Unified Pension) |
Contribution | Nil | 10% of Basic Pay | 10% of Basic Pay |
Govt.Contribution | Nil | 14% | 18.5% |
Pension Payment | 50% Last Pay Drawn Minimum pension Rs9000/- | 60% of accumulated amount will paid pack and the balance 40% will be deposited in Annuity Bonds for pension from the interest earned | All accumulated amount will be foregone to Govt 50% of pension from last pay drawn(12Months average) and minimum pension Rs10,000/- |
Family Pension | Enhanced pension 50% of pay last drawn for 7yrs subject to 65years of age or date of death whichever is earlier and original pension 30% of pay last drawn | The interest earned from the Annuity bond will be paid as pension in both cases.(Service and Family) | 60% of pension from the 50% of original pension. Even this will be eligible from the pension sanctioned on superannuation class |
DCRG | 33yrs of emoluments last drawn subject to maximum Rs2000000/- | Minimum service DCRG | Eligible for DCRG and modalities not clear |
Commutation | 40% of pension arrived (33.3% of pension arrived in state Govt) | No commutation | No commutation. Instead 10% of Pay+Da for a completed 6months of total service |
DA | Based on consumer Index | No DA | Based on consumer Index |
Pension Enhancement | 20% to 100% eleigible @ the completed age of 80,85,90,95 & 100 | No Enhancement | No Mention |
Pension Revision | Revised whenever pay commission implemented | No Revision | No Mention |
There may be many more shortcomings in UPS, which may be known after the full text of UPS is notified.
No comments:
Post a Comment