Thursday, August 30, 2018

லிபரலைஸ்டு பென்சன் ரூல்ஸ்- சிறு அறிமுகம்


தமிழ்நாடு அரசு தனது பணியாளர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி வழங்கும்போது வழக்கமாக வெளியிடும் அறிக்கையில் சுமார் 12,00,000 லட்சம் ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதால் ஆண்றொன்றுக்கு சில கோடிகள் செலவினம் ஆகின்றது என்று வெளியிடும். அதற்கு மாறக காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை வைத்து போரட்டம் நடத்தும் சங்கங்கள் காலியாக உள்ள 2,00,000 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்புமாறு போராட்டம் நடத்தும். இவ்வாறு இருவரும் எண்ணிக்கை பற்றி வரையறை செய்வதின் மூலம் தோறாயமாக 10,00,000 லட்சம் என்று கணக்கில் கொள்வது நமக்கு சாத்தியமாகும்.
இந்த எண்ணிக்கை கணக்கு நமது பதிவுக்கு தேவையில்லை என்றபோதிலும், பணியிலுள்ள பணியாளர்களில் சுமாராக மூன்றில் இரண்டு பங்கினர் 01.04.2003 க்கு முன் பணியில் இணைந்தவர்களாக இருக்கின்றார்கள். இப்பெருங்கூட்டம் மட்டும் தான் “TAMILNADU LIBERALISED PENSION RULES 1964” ல் சொல்லப்பட்ட விதியின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். 01.04.2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் EPS என்ற திட்டத்தின்படி பிரிக்கப்பட்டவர்கள் . இவர்களின் கதை வேறு, தனித் தொடராக பின்னால் எழுதலாம், தேவை ஏற்படின்.
அரைக்காசானாலும் அரசாங்க காசு", “கால் மீ தோட்டி, பே மீ போர்ட்டி" “அரசாங்க கோழிமுட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும்" போன்ற பேச்சு வழக்குகள் அரசுப்பணியின் மேன்மையை பறைசாற்றும் வார்த்தைகள் என்பது உண்மையே. சமூக அங்கீகாரம், பணிப்பாதுகாப்பு, நிரந்தர வருமானம் (உரிய சம்பளம் மட்டுமே என்று இங்கு கணக்கில் கொள்ளவும்) போன்றவை நீண்ட நெடிய போராட்டங்களின் வாயிலாக பெற்று உறுதி செய்யப்பட்டவைகளாகும். ஆகவே இதன் பால் நமக்கு ஈர்ப்பு இருப்பது இயற்கையே. பணிக்காலங்களில் காலம் தவறாத சம்பளம், ஓய்வுக்குப் பின் ஒய்வூதியம் என பொருளாதார பாதுகாப்பினை உறுதி செய்வதால் அரசுப் பணிக்கு அன்றும் இன்றும் அமோக வரவேற்பு.
அரசுப்பணி புராணம் போதும் விபரத்திற்கு வாரும் பிள்ளாய் என நீங்கள் முணு முணுப்பது என் காதுகளில் விழுகிறது, ஆகவே விஷயத்திற்கு வருகிறேன்.
இன்றைய நிலையில் பணியாற்றுகின்றவர்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறப்போவதில் எவ்வித மாற்றங்களில்லை. ஆனால் அப்படிப்பற்றோர் தாங்கள் பெறப்போகிர ஓய்வூதியங்கள் பற்றி முழு விபரங்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் சந்தேகமே. என்ன ஓய்வூதியம், எவ்வளவு, எவ்வாறு என்று அறிந்து உள்ளவர்கள் மிகச் சிலரே. அதற்கு காரணம் அவர்கள் களப்பணியாளர்களாகவும், கற்பித்தல் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், அலுவலகத்தில் பணியாற்றுவோரில் நிர்வாகப்பிரிவு மற்றும் பட்டியல் தயாரிப்பு பிரிவில் பணியாற்ற வாய்பில்லாதோரும் இவ்விதிகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. தன்முனைப்பாக ஒரு சிலர் இவ்விதிகள் பற்றி படித்து கேட்டு அறிந்து வைத்திருப்பர். அது விதிவிலக்கு ஆகும்.
ஆகவே இச்சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் மற்றும் அதன் விதிகள் பற்றியும், மேலும் ஓய்வூதிய கருத்துரு, ஓய்வூதிய படிவங்கள் எவ்வாறு தயாரிப்பது போன்றவற்றை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தொடராக      மூத்தோர் நண்பன்  வலைப்பூவில் எழுத முயலுகிறேன். ஓய்வூதியம் பற்றி ஆழ்ந்த புலமை கொண்ட நண்பர்கள் இந்த முயற்சியை பாராட்டுவதுடன், இம்முயற்சி சிறப்படைய வழிகாட்டுவார்கள் என நம்புகிறேன்.
துவக்கம் சாதாரணமாக இருப்பினும், முடிவு பிரமாண்டமாக இருக்கும்
என்று சொல்லி விரைவில்….. ( அட ஆமாங்க முதலில் என்னை தயார்படுத்தவேண்டாமா!!!) எழுதுகிறேன் தொடராக.
நன்றியுடன்… சீனி. நாமதேவன்.

Monday, August 27, 2018

மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை

கருவூல கணக்குத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை.

2014 முதல் 2018 வரையிலான காலத்திற்கு யுனைடெட் இந்திய கம்பெனி வழங்கிய பழைய அடையாள அட்டையையே 2018க்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் 2014 முதல் அடையாள அட்டை பெறாதவர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பம் இடப்பட்ட Annexure iv படிவத்தை பயன் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதே போல் 01.07.2018 க்குப் பின் ஓய்வுபெற்றோரும் Annexure iv கருவூலம் மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு அரசாணை

தமிழ்நாடு அரசின் ஒய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த ஜூன் மாதம் முடிவுற்ற நிலையில் அம்மாத இறுதி நாளில் 30.06.2018ல் அரசாணை வெளியிடப்பட்டது.
(GO MSNO:222) பதிவிறக்கம் செய்யலாம்)
ஒய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டம் ஜூன்மாத இறுதியில் முடிந்த நிலையில், ஜூலை மாதம் 15 தேதிவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஓய்வூதியர் மத்தியில் ஒரு குழப்ப நிலையினை உருவாக்கி இருந்தது. அதற்குப்பின் முன் தேதியிட்டு அரசாணை வெளியிடப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும். 

வழங்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள சாதக பாதகங்களை இப்போது வரிசை படுத்திப்பார்க்கலாம்.

சாதகங்கள்:

அ)
 பணியிலுள்ள பணியாளர்களுக்கு வழங்குவது போல்  மருத்துவ செலவினம் ரூபாய் 400000/-(நான்கு இலட்சம்)  உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும் சிறப்பு வகையின  மருத்துவ செலவினமாக ரூபாய் 750000/-(ஏழு இலட்சத்து  ஐம்பதாயிரம்) ஆகிய இரு வகையான செலவினங்கள்  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை (A block of 4 years) என்ற  முறையில் 01/07/2018 to 30/06/2022 அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆ)
அனைத்து அரசு மருத்துவமனைகள் தவிர்த்து  குறைந்தபட்சமாக 5 தனியார் மருத்துவமனைகள்  ஒவ்வொரு மாவட்டத்திலும் சேர்க்கப்படவேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சில பல்நோக்கு  மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளது.
இ)
அரசு மற்றும் அட்டவணை படுத்தப்பட்ட  மருத்துவமனைகளில் முன் அனுமதி பெற்று பணமற்ற  முறையினில் (cashless Treatmentமருத்துவ உதவி  பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவசரகால  மருத்துவ உதவிகளும் மேற்கண்ட மருத்துவ மனைகளில்  பெற்றுக்கொள்ள அனுமதிக்கபடுகிறது.
 ஈ)
அவசரகால மருத்துவ உதவிகள் அட்டவணை படுத்தப்படாத  மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம் என்றும்  அதற்கான செலவினங்களை நேரடியாக செலுத்திவிட்டு  உரியபற்றுச் சீட்டுடன் விண்ணப்பித்து பணம் திரும்ப  பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
 கணவன் மனைவி இவர்களுடன் மனம் மற்றும் உடல்  ரீதியான பதிப்பிற்குள்ளான வாரிசுகள் மருத்துவ உதவி  பெற்றுக்கொள்ள அனுமதிக்கபடுகிறது. திருமணமாகாத  மகள்கள், விதவை மகள்கள், விவாகரத்து பெற்ற மகள்கள்  ஆகியோர்களும் மருத்துவ உதவி பெற்றுக்கொள்ள  அனுமதிக்கபடுகிறார்கள். இவர்கள் 25 வயதினை  கடந்தவர்களாக இருப்பினும் இவ்வுதவி பெற  அனுமதிக்கபடுவார்கள்.

பாதகங்கள்

அ. ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகள் இதில்  சேர்க்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட  வேண்டியுள்ளது மூத்தோர்களுக்கு இயல்பாகவே வயது  முதிர்வின் காரணாமாக ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு  உதவி இல்லாமல் அறுவை  சிகிச்சை  போன்றவற்றைக்கு  மட்டுமே உதவி வழங்கப்படுகிறது. இதற்கும் மேலாக  இது  வரையிலும் பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய் 150/- க்கு  பதிலாக ரூபாய் 350/- பிடித்தம்  செய்யப்படும் என்ற  அறிவிப்பு ஓய்வூதியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்சியை  உருவாக்கியுள்ளது. மிக நீண்ட  கோரிக்கை  போராட்டத்திற்குப் பின் உயர்த்திபெற்ற மருத்துவ படி  ரூபாய் 300/- ஆனால் பிடித்தமோ ரூபாய்  350/-,அதுவும்  உயர்த்தி வழங்கிய ஓராண்டுக்குள்,கொடுத்து திரும்ப  எடுத்துக்கொள்வதுபோல் இருக்கின்றது.
மாவட்டம் வாரியாக அட்டவணையில் இணைக்கபட்ட  மருத்துவமனைகள், எந்த நோய்களுக்கு மருத்துவ  உதவிகள் கிடைக்கும், சிறப்பின நோய்கள் யாவை என்ற  அனைத்து விவரங்களும் ஆணையில் குறிக்கப்பட்டுள்ளது.


மேலும் விபரங்கள் தேவையெனில் comments தொடர்பு  கொள்ளலாம்.













Sunday, August 26, 2018

வணக்கம்

அனைத்து ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும்  எனது பணிவான வணக்கம் . இனி இந்த வலைப்பூவில் நமது செய்திகள் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவுசெய்யப்படும் . அனைவரும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன்
அன்புத்தோழன்
நாமதேவன் .