Monday, August 27, 2018

ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு அரசாணை

தமிழ்நாடு அரசின் ஒய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த ஜூன் மாதம் முடிவுற்ற நிலையில் அம்மாத இறுதி நாளில் 30.06.2018ல் அரசாணை வெளியிடப்பட்டது.
(GO MSNO:222) பதிவிறக்கம் செய்யலாம்)
ஒய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டம் ஜூன்மாத இறுதியில் முடிந்த நிலையில், ஜூலை மாதம் 15 தேதிவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஓய்வூதியர் மத்தியில் ஒரு குழப்ப நிலையினை உருவாக்கி இருந்தது. அதற்குப்பின் முன் தேதியிட்டு அரசாணை வெளியிடப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும். 

வழங்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள சாதக பாதகங்களை இப்போது வரிசை படுத்திப்பார்க்கலாம்.

சாதகங்கள்:

அ)
 பணியிலுள்ள பணியாளர்களுக்கு வழங்குவது போல்  மருத்துவ செலவினம் ரூபாய் 400000/-(நான்கு இலட்சம்)  உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும் சிறப்பு வகையின  மருத்துவ செலவினமாக ரூபாய் 750000/-(ஏழு இலட்சத்து  ஐம்பதாயிரம்) ஆகிய இரு வகையான செலவினங்கள்  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை (A block of 4 years) என்ற  முறையில் 01/07/2018 to 30/06/2022 அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆ)
அனைத்து அரசு மருத்துவமனைகள் தவிர்த்து  குறைந்தபட்சமாக 5 தனியார் மருத்துவமனைகள்  ஒவ்வொரு மாவட்டத்திலும் சேர்க்கப்படவேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சில பல்நோக்கு  மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளது.
இ)
அரசு மற்றும் அட்டவணை படுத்தப்பட்ட  மருத்துவமனைகளில் முன் அனுமதி பெற்று பணமற்ற  முறையினில் (cashless Treatmentமருத்துவ உதவி  பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவசரகால  மருத்துவ உதவிகளும் மேற்கண்ட மருத்துவ மனைகளில்  பெற்றுக்கொள்ள அனுமதிக்கபடுகிறது.
 ஈ)
அவசரகால மருத்துவ உதவிகள் அட்டவணை படுத்தப்படாத  மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம் என்றும்  அதற்கான செலவினங்களை நேரடியாக செலுத்திவிட்டு  உரியபற்றுச் சீட்டுடன் விண்ணப்பித்து பணம் திரும்ப  பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
 கணவன் மனைவி இவர்களுடன் மனம் மற்றும் உடல்  ரீதியான பதிப்பிற்குள்ளான வாரிசுகள் மருத்துவ உதவி  பெற்றுக்கொள்ள அனுமதிக்கபடுகிறது. திருமணமாகாத  மகள்கள், விதவை மகள்கள், விவாகரத்து பெற்ற மகள்கள்  ஆகியோர்களும் மருத்துவ உதவி பெற்றுக்கொள்ள  அனுமதிக்கபடுகிறார்கள். இவர்கள் 25 வயதினை  கடந்தவர்களாக இருப்பினும் இவ்வுதவி பெற  அனுமதிக்கபடுவார்கள்.

பாதகங்கள்

அ. ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகள் இதில்  சேர்க்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட  வேண்டியுள்ளது மூத்தோர்களுக்கு இயல்பாகவே வயது  முதிர்வின் காரணாமாக ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு  உதவி இல்லாமல் அறுவை  சிகிச்சை  போன்றவற்றைக்கு  மட்டுமே உதவி வழங்கப்படுகிறது. இதற்கும் மேலாக  இது  வரையிலும் பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய் 150/- க்கு  பதிலாக ரூபாய் 350/- பிடித்தம்  செய்யப்படும் என்ற  அறிவிப்பு ஓய்வூதியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்சியை  உருவாக்கியுள்ளது. மிக நீண்ட  கோரிக்கை  போராட்டத்திற்குப் பின் உயர்த்திபெற்ற மருத்துவ படி  ரூபாய் 300/- ஆனால் பிடித்தமோ ரூபாய்  350/-,அதுவும்  உயர்த்தி வழங்கிய ஓராண்டுக்குள்,கொடுத்து திரும்ப  எடுத்துக்கொள்வதுபோல் இருக்கின்றது.
மாவட்டம் வாரியாக அட்டவணையில் இணைக்கபட்ட  மருத்துவமனைகள், எந்த நோய்களுக்கு மருத்துவ  உதவிகள் கிடைக்கும், சிறப்பின நோய்கள் யாவை என்ற  அனைத்து விவரங்களும் ஆணையில் குறிக்கப்பட்டுள்ளது.


மேலும் விபரங்கள் தேவையெனில் comments தொடர்பு  கொள்ளலாம்.













3 comments:

  1. நன்றிகள் உரித்தாகுக

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஆத்மாராவ். மதுரை

    ReplyDelete