Saturday, October 19, 2024

ஓய்வூதிய நண்பர்களின் சிந்தனைகள் எங்கும் எப்பொதும் ஒன்றே.

 ஆண்டுப்பேரவை, தொடர்ந்த நிர்வாகிகள் தேர்வு


19.10.2024 சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி மாவட்டம், கே.கே நகர் கிளையின் ஆண்டுப்பேரவை கூட்டமும், அதை தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வும் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுப்பேரவை கூட்டத்திற்கு திரு.அண்ணாதுரை தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். தொடர்ந்து செயலாளர் அறிக்கையும், பொருளாளர் வரவு செலவு அறிக்கையும் சமர்பித்து, உறுப்பினர்களின் விவாதத்தை துவக்கி வைத்தனர். நீண்ட விவாதத்திற்கு பின் அவைகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் திரு. பரமசிவம் அவர்கள் சங்க வரலாறு பற்றியும், எதிர்காலத்தில் ஓய்வூதியர்கள் சந்திக்க உள்ள சவால்களையும் விளக்கி, அதற்கு மாற்றாக நமது செயல் பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் வழிகாட்டி ஓய்வூதியர்களுக்கு நம்பிக்கையளித்து உணர்வு பூர்வமாக. உரையாற்றி அமர்ந்தார்.


உண்மையில் ஒரு சிறப்பான உரையாக அமைந்தது என்பதில் எள்ளளவும் அய்யம் கொள்ள வேண்டியதில்லை. 

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கிளையின் தலைவர் திரு.சீனி.நாமதேவன் விருந்தினராக அழைக்கப்பட்டு, கருவூலத்தின்  பயன்பாட்டில் உள்ள கலஞ்சியம் என்ற மென்பொருள் பற்றி விளக்கி பேசி உறுப்பினர்களின் அய்யப்பாடுகளுக்கு இயன்ற அளவில் பதிலுரை அளிக்க அனுமதிக்கப்பாட்டார். மதிய உணவு சிறப்பான முறையில் அனைவருக்கும் உறுப்பினர் ஒருவரே தனது செலவில் வழங்கியது மகிழ்ச்சியளிப்பதுடன், சிறந்த விருந்தோம்பலுக்கு சாட்சியமாக அமைந்தது. 

நிகழ்வின் புகைபடங்கள்:











No comments:

Post a Comment