Monday, December 16, 2024

மாவட்ட தேர்தல் மற்றும் இணையதளம் துவக்க நிகழ்வு...

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க இணையதளம் துவக்கம்



இம் மாதத்தில் 07.12.2024 முதல் சனிக்கிழமை காலை 10 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. மதுரை மாவட்ட தலைவரும், தேர்தல் ஆணையருமான திரு.ராமானுஜம் அவர்கள் வெற்றி பெற்ற மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களை வெளியிட்டு, உறுதிமொழி ஏற்றபின் தேர்தல் பணிகள் நிறைவு பெற்றது.

தேர்தல் பணிகள் முடிந்தவுடன், ஆத்தூர் வட்டம் @ சின்னாளபட்டி கிளையின் தலைவர் திரு.சீனி. நாமதேவன் அவர்களால் உருவாக்கப்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், திண்டுக்கல் மாவட்டத்தின் இணையதளம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் திரு. S.M.தம்பிதுரை அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு வெளியிட்டார். மதுரை மாவட்ட தலைவர் தனது பாராட்டுரையில் இந்நிகழ்வு மகிழ்சியளிப்பதுடன் தமிழ் நாட்டில் இது தான் முதல் முயற்சி என்று குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்சியான செய்தி என்பதுடன், குறிப்பாக நாமதேவன் அவர்களுக்கு நல்ல மன நிறைவினை அளித்தது .





No comments:

Post a Comment