தமிழ்நாடு அரசு தனது பணியாளர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி வழங்கும்போது வழக்கமாக வெளியிடும் அறிக்கையில் சுமார் 12,00,000 லட்சம் ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதால் ஆண்றொன்றுக்கு சில கோடிகள் செலவினம் ஆகின்றது என்று வெளியிடும். அதற்கு மாறக காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை வைத்து போரட்டம் நடத்தும் சங்கங்கள் காலியாக உள்ள 2,00,000 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்புமாறு போராட்டம் நடத்தும். இவ்வாறு இருவரும் எண்ணிக்கை பற்றி வரையறை செய்வதின் மூலம் தோறாயமாக 10,00,000 லட்சம் என்று கணக்கில் கொள்வது நமக்கு சாத்தியமாகும்.
இந்த எண்ணிக்கை கணக்கு நமது பதிவுக்கு தேவையில்லை என்றபோதிலும், பணியிலுள்ள பணியாளர்களில் சுமாராக மூன்றில் இரண்டு பங்கினர் 01.04.2003 க்கு முன் பணியில் இணைந்தவர்களாக இருக்கின்றார்கள். இப்பெருங்கூட்டம் மட்டும் தான் “TAMILNADU LIBERALISED PENSION RULES 1964” ல் சொல்லப்பட்ட விதியின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். 01.04.2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் EPS என்ற திட்டத்தின்படி பிரிக்கப்பட்டவர்கள் . இவர்களின் கதை வேறு, தனித் தொடராக பின்னால் எழுதலாம், தேவை ஏற்படின்.
“அரைக்காசானாலும் அரசாங்க காசு", “கால் மீ தோட்டி, பே மீ போர்ட்டி" “அரசாங்க கோழிமுட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும்" போன்ற பேச்சு வழக்குகள் அரசுப்பணியின் மேன்மையை பறைசாற்றும் வார்த்தைகள் என்பது உண்மையே. சமூக அங்கீகாரம், பணிப்பாதுகாப்பு, நிரந்தர வருமானம் (உரிய சம்பளம் மட்டுமே என்று இங்கு கணக்கில் கொள்ளவும்) போன்றவை நீண்ட நெடிய போராட்டங்களின் வாயிலாக பெற்று உறுதி செய்யப்பட்டவைகளாகும். ஆகவே இதன் பால் நமக்கு ஈர்ப்பு இருப்பது இயற்கையே. பணிக்காலங்களில் காலம் தவறாத சம்பளம், ஓய்வுக்குப் பின் ஒய்வூதியம் என பொருளாதார பாதுகாப்பினை உறுதி செய்வதால் அரசுப் பணிக்கு அன்றும் இன்றும் அமோக வரவேற்பு.
அரசுப்பணி புராணம் போதும் விபரத்திற்கு வாரும் பிள்ளாய் என நீங்கள் முணு முணுப்பது என் காதுகளில் விழுகிறது, ஆகவே விஷயத்திற்கு வருகிறேன்.
இன்றைய நிலையில் பணியாற்றுகின்றவர்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறப்போவதில் எவ்வித மாற்றங்களில்லை. ஆனால் அப்படிப்பற்றோர் தாங்கள் பெறப்போகிர ஓய்வூதியங்கள் பற்றி முழு விபரங்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் சந்தேகமே. என்ன ஓய்வூதியம், எவ்வளவு, எவ்வாறு என்று அறிந்து உள்ளவர்கள் மிகச் சிலரே. அதற்கு காரணம் அவர்கள் களப்பணியாளர்களாகவும், கற்பித்தல் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், அலுவலகத்தில் பணியாற்றுவோரில் நிர்வாகப்பிரிவு மற்றும் பட்டியல் தயாரிப்பு பிரிவில் பணியாற்ற வாய்பில்லாதோரும் இவ்விதிகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. தன்முனைப்பாக ஒரு சிலர் இவ்விதிகள் பற்றி படித்து கேட்டு அறிந்து வைத்திருப்பர். அது விதிவிலக்கு ஆகும்.
ஆகவே இச்சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் மற்றும் அதன் விதிகள் பற்றியும், மேலும் ஓய்வூதிய கருத்துரு, ஓய்வூதிய படிவங்கள் எவ்வாறு தயாரிப்பது போன்றவற்றை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தொடராக மூத்தோர் நண்பன் வலைப்பூவில் எழுத முயலுகிறேன். ஓய்வூதியம் பற்றி ஆழ்ந்த புலமை கொண்ட நண்பர்கள் இந்த முயற்சியை பாராட்டுவதுடன், இம்முயற்சி சிறப்படைய வழிகாட்டுவார்கள் என நம்புகிறேன்.
துவக்கம் சாதாரணமாக இருப்பினும், முடிவு பிரமாண்டமாக இருக்கும்
என்று சொல்லி விரைவில்….. ( அட ஆமாங்க முதலில் என்னை தயார்படுத்தவேண்டாமா!!!) எழுதுகிறேன் தொடராக.
நன்றியுடன்… சீனி. நாமதேவன்.
Thanks
ReplyDeleteGood Effort
ReplyDeletewe will support all your deeds in this matter.
ReplyDeleteExcellent
ReplyDeleteதுவக்கம் அருமை.
ReplyDeleteகட்டுரை போல அல்லாமல் நேரில் பேசுவது போல இருப்பது நன்று.