Monday, September 30, 2024

களஞ்சியம் நமக்கான மென்பொருள்

 

தமிழ் நாட்டில் உள்ள சுமார் மூன்று லட்சம் ஓய்வூதியர்களின் விவரங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றிய ஒரு மென்பொருள், அதுவும் மிடுக்கு பேசியில்(Smart phone) சரிபார்க்க முடியும் என்பது அறிவியலின் பாய்ச்சலே காரணமாகும். எங்கும் எதிலும் கணினி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அவைகளுடன்  இணைத்து பயணப்படுவதே சாலச்சிறந்ததாகும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன், திரு.ராஜிவ்காந்தி அவர்கள் ஒன்றிய அரசின் பிரதம அமைச்சராக இருந்த போது துவக்கப்பட்டது. 21 ஆம் நூற்றண்டை நோக்கி என்று அரசின் அனைத்து துறைகளையும் கணினி மயமாக்கப்படுதல் என்ற திட்டம். துவக்கத்தில் இத்திட்டம் சந்தித்த எதிர்ப்பானது சொல்லிமாளாது. தமிழ் நாடு அரசும் ஒன்றிய அரசின் வழியில் செயல்படுத்த முனையும் போது அன்றைய அரசு ஊழியர்சங்கம் மிககடுமையாக எதிர்த்தது, போட்டி சங்கம் நடத்த வேண்டிய நிலையில் இருந்த அரசுப்பணியாளர் சங்கமும் இணைந்து எழுப்பிய குரலில் என்னுடைய குரலும் அச்சிரம் பிசகாமல் கலந்து ஒலித்தது உண்மையே. காலம் கடந்து ஞானம் பிறந்தது போல கணினி இல்லா வாழ்வு காற்றை இழந்த உயிர் போலாகும் என்பதை எனது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டுணர்ந்த உண்மையாகும்.

கணினியின் குறு வடிவமே செல்லிடப்பேசி அல்லது மிடுக்கு பேசியாகும். இன்று செல்லிடபேசி இல்லாத கரங்களே இல்லை என்ற வகையில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் செல்லிடப்பேசியை பயன்படுதுவதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் தவிப்புகள் தற்போது பெருமளவில் குறந்துவிட்டது கண்கூடு. புதிய நடைமுறைகள் துவக்கத்தில் சந்திக்கும் இடர்பாடுகளைக் கொண்டு அவைகளை மறுப்பது என்பது நம்மை பின்நோக்கி இழுப்பதற்கு சமமாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வளர்ச்சிக்கான படிகளாகும்.. அறிவியல் உருவாக்கித் தருகின்ற வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும். அந்த வகையில் தற்போது நமக்கு ஆக்கி அளித்திருப்பது களஞ்சியம் என்ற மென்பொருளாகும். நமது உள்ளங்கையில் நமது ஓய்வூதியம் பற்றிய அனைத்து விபரங்களும். புத்தகம் போல பெரிய வடிவத்தில் ஓய்வூதியம் வழங்கல் ஆணை (PPO-Pension Payment Order) என்று இருந்த நிலையில் வேறுபட்டு அனைத்தும் நமது கையடக்க செல்லிடப்பேசியில் ஒளிர்கின்றது. பயன்பாட்டுக்கு வந்த ஆரம்ப நிலையில் தவறுகளும் செயல்படாமையும் ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டது உண்மையே, ஆனல் இப்போது அத்தவறுகள் களையப்பட்டு இலகுவாக நம்மால் செயல்படுத்தமுடிகிறது. மிகக்குறைந்த அளவே மிடுக்குப்பேசியின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் கூட சிறப்பாக களஞ்சியம் மென்பொருளை பயன்படுத்த முடியும் என்ற நிலை தற்போதுள்ளது.

ஏற்கனவே, IFHRMS ல் பதிவுகள் ஏற்றப்பட்ட ஓய்வூதியர்களின் சுயவிவரங்கள் களஞ்சியம் மென்பொருளில் தெளிவாக காட்டப்படும். தொடர்ச்சியாக மாத ஓய்வூதியம், ஆண்டுக்கான மொத்த ஓய்வூதியம், வருடாந்திர நேர்காணல், ஒரு கருவூலத்திலிருந்து மற்றொரு கருவூலத்திற்கு மாறுதல், பண்டிகை முன்பணம் பெறல், வாரிசுகளின் பெயர்குறிப்பு, வருமான வரி போன்ற பலவகை உதவிகள் இந்த மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். அதில் சில உதவிகள் இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. ஆனல் மிக அத்தியாவசியமான உதவிகள் சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே அனைத்து ஓய்வூதியர்களும் களஞ்சியம் மென்பொருளை பதிவிறக்கி செல்பேசியில் பதிந்து கொள்ள வேண்டுகிறேன். உதவிக்கு தங்களது படித்த அல்லது படித்துக்கொண்டு இருக்கும் மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி போன்றவர்களை பயன்படுத்துங்கள். அல்லது கணினி பற்றி அறிந்த சக ஓய்வூதியர்களின் உதவியை நாடுங்கள். நமக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் முழுவதுமாக பயன்படுத்துங்கள், குறை நிறைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இம் மென்பொருளை மேம்படுத்த முடியும்.என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி நிறைவு செய்கிறேன். நன்றி.

இக்கட்டுரை "மூத்தோர் குரல்" செப்டம்பர்' 2024 மாதத்திய இதழில் பிரசுரிக்கப்பட்டது

Saturday, September 28, 2024

மாநில அளவில் ஓய்வூதிய சொந்தங்களின் கூடல்.....

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்- மாநில பேரவை

இம்மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் தருமபுரி நகரில் மாநில பேரவை கூட்டம் சிறப்பான தொடக்கத்தினை கண்டது. பரவலான உறுப்பினர்கள் பங்களிப்பு இருந்தது என்பதற்கு சான்றாக மண்டப வளாகம் நிறைந்து இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் சார்பாக அறுவர் குழு மாவட்டத் தலைவர் திரு. தம்பிதுரை அவர்களின் தலைமையில் சங்க கடமையினை சிறப்பாக நிலை நாட்டி அதன் வரலாற்றுப் பக்கங்களில்  இடம் பெற செய்து விட்டனர். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும். நன்றி.











Monday, September 23, 2024

ஓய்வூதியர்களின் உற்சாக பங்களிப்பு

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆத்தூர் கிளையின் 6வது பேரவைக்கூட்டம்

அருமை ஓய்வுதிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த 17.-8.2024 சனிக்கிழமை காலை சின்னாளபட்டி நகரில் நமது கிளை சங்கத்தின் 6வது பேரவை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வின் புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு கீழே


இனிய தொடக்கம்