லிபரலைஸ்டு பென்சன் ரூல்ஸ்- சிறு அறிமுகம் என்ற தலைப்பின் தொடர்சியாக ஓய்வூதியம் என்றால் என்ன? என்பது பற்றி எழுத விழைகிறேன்.
மொபைல் போனின் தட்டச்சு கருவியில் இத்தலைப்பை பதியும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. நான் ஓய்வு பெற்று ஏறக்குறைய 10ஆண்டுகள் கடந்த பின், இன்று வரையிலும் தடங்கல் இல்லாமல் ஓய்வூதியம் பெற்றுவரும் நிலையில் இத் தலைப்பு பற்றி பதிவிடுவது சரிதானா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். கேள்வி தான் இருந்ததே தவிர பதில் இல்லை. பதில் இல்லை என்ற தைரியத்தில் தொடர்ந்து எழுத துணிந்தேன்.
நீண்ட இடைவேளைக்குப் பின்னால் எனது ஞாபக மூட்டையை அவிழ்க்க நினைக்கிறேன். அதில் அறுதப்பழசுகளும் வரலாம் பல அற்புத நினைவுகளும் காட்சிப்படலாம். அற்புதங்களை வரவேற்று வாழ்த்தும் வேளையில் அறுதப்பழசுகளை அறவே ஒதுக்கி என்னை காக்க வேண்டுகிறேன்.
சுதந்திர இந்தியாவில் பிறந்த எனக்கு Pension act 1871 பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது என்று சொன்னால், அதற்கான தியாகங்கள் புரிந்த எனது பெறுமதிப்பிற்குரிய மூத்த முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள வரலாற்று நிகழ்வுகளும், அவைகளை தாங்கி நிற்கின்ற எழுத்துக்களும் தான் என்பதை இங்கு அறிதியிட்டு, நன்றி கலந்த வணக்கத்துடன் சொல்லவிழைகிறேன். வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடும் போது மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் அதிகபட்ச கவனத்துடன் இருப்பேன் என்பது எனது தார்மீக கடமையாகும்.
இப்போதும் வழக்கம்போல் நல்லதை எடுத்து அல்லதை விடுத்து அன்னம் போல் இருப்போம் என்று என்பால் நீங்கள் எடுத்துள்ள முடிவு எனக்கு நம்பிக்கையளிக்கிறது. நீண்ட நெடிய வரலாறு உள்ள இப் பொருள் பற்றி குறுகிய பக்கங்களில் நிரப்ப முடியாததால் வாரம் ஒரு பதிவு என்ற முறையில் தொடராக எழுத எத்தனிக்கிறேன். இப்பொருள் குறித்து கடுகளவு அறிவுடையவனாகிய நான் கடும் முயற்சியில் இறங்குகிறேன். அளவிடா புலமை பெற்ற பலர் இதை வாசிக்கும் வாய்ப்பை பெறலாம், அவ்வேளையில் தவறுகள் கண்டிடின் சுட்டிக்காட்டினால் உடன் சரிசெய்து கொள்கிறேன்.
உங்கள் ஆதரவு என்னை வீறுகொண்டு எழச் செய்யவேண்டும் என்பது மட்டுமே எனது அவா. முதல் பதிவு வரும் சில நாட்களில். நன்றி.
ஆரம்பமே அசத்தல்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி தோழர். வசிச்டரின் வாயால் பிரம்மரிஷி.
ReplyDeleteமிகச் சிறந்த பணி. வாழ்க்கையின் பல்வேறு கூறுகளைப் பொறு வரை என்னவென்று அறிந்து கொள்ளாமலேயே முடித்து விடுகிறோம் அல்லது அறியும் முன்பே முடிந்து விடுகிறது. வாழ்க்கையின் பின்அந்திப்பொழுதில் ஒளியூட்டுகின்ற ஓய்வூதியம் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி. தங்களின் பொருள் பொதிந்த கருத்து எனக்கு உற்சாகம் அளிக்கிறது எனது மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களே.
Delete