ஓய்வூதிய தொடக்கம்
" பென்சனா அதுல என்ன சார் இருக்கு தெரியிரதுக்கு ... அது என்ன ஒரு தலைவரா? அல்லது ஒரு அரசியல் கட்சியா? தொடக்கம், வளர்ச்சி, வரலாறு என்று சொல்லுவதற்கு.
'இப்ப போயி இத பேசிக்கிட்டு, ஏதாவது பணம் கூட்டிக்குடுக்கிறாங்களானு பாருக்க சார். சென்ட்ரல் கவர்மெண்டில் 2% டிஏ சொல்லியாச்சாம் நமக்கு எப்பனு சொல்லுங்க " போன்ற சொல்லாடல்கள் தான் தற்போது அதிகமாக நமது காதுகளில் ஒலிக்கின்ற குரலாக இருக்கிறது.
ஓய்வூதியத்தின் ஆதித்தோற்றுவாய், அதன் வளர்ச்சி, இன்றைய நிலை (பாங்களிப்பு ஓய்வூதியம்) போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை இன்மையே காரணம். திரைப்படம் ஒன்றில் சிரிப்பு நடிகர் திரு. வடிவேலு அவர்கள் சொல்வது போல " பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மண்ட் வீக்" என்பது போல ஓய்வூதியத்தின் அடிப்படை தெரியாமல் நம்மில் பல பேர் ஓய்வூதியம் பற்றி பேசி வருகிறோம்.
ஓய்வூதியம் என்பது ஒரு பள்ளிப் பாடமல்ல. பல சிக்கல்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு விதித் தொகுப்பு. இதற்கான சட்டங்களையும் விதிகளையும் உள்ளடக்கி ஆணைகளாக வெளியிட்டுள்ள மத்திய, மாநில அரசுகள் இதன்மீது எவ்வித சட்ட வறையறைகளை (Constitutional definition) உருவாக்கி இணைக்க வில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சட்ட வடிவு அல்லது ஒரு விதியின் வடிவு என்றால் அவைகள் முக்கியமாக எந்தப் பொருளை குறிக்கின்றதோ அந்த சொல் அல்லது சொற்றொடரின் வறையறை (Definition) இல்லாவிடில் அவை முழுமையான சட்டமாகவோ அல்லது விதியாகவோ கணக்கில் கொள்ள முடியாது.
முதல் ஊதியக்குழுவிலிருந்து நான்காவது ஊதியக்குழு வரையிலும் வறையறைகள் ஏதுமில்லா நிலையில் ஊதியக்குழுக்கள் தத்தம் பரிந்துரைகளை அரசுக்கு சமர்பித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது ஊதியக்குழுவும் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சங்கங்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டது. இதுவரையிலும் வாளாவிருந்த சங்கங்கள் இம்முறை கடுமையாக வாதாடியும், தொடர்ந்த வற்புறுத்தலாலும் ஓய்வூதியம் பற்றிய வறைமுறைகள் ஊதிய குழு அறிக்கை பாரா 127(2) சேர்க்கப்பட்டது. அதுவும் முத்தாய்ப்பாக இந்திய அரசியல் சட்டத்தின் 366(17) பிரிவின் படி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த வறையறையினை பதிவு செய்தது.
366(17) ன் சுருக்கம் " Pension means a pension, and includes Retired Pay so payable whether contributory or not, of any kind whatsoever payable to or in respect of any person and any sum or sums so payable by way of the return, with or without interest there on or any other addition thereto, of subscription to a provident fund"
இவை போன்ற ஒரு பாதுகாப்பு பண்டைய காலத்தில் இருந்ததா?
இக்கேள்விக்கான பதிலை பகுதி 2 ல் தேடுவோம்... தொடரும்...
சொல்லியவிதம் சிறப்பாக உள்ளது. பணி தொடருட்டும்.
ReplyDeleteநன்றி
Deleteஅருமை நாமதேவன்.
ReplyDeleteநன்றி தோழர்.
Deleteதங்கள் செயல் தொடரட்டும்
Deleteநன்றி.நல்ல தொகுப்புக்கள்.
ReplyDeleteThanks
ReplyDeleteThanks sir
ReplyDelete